தேவையான பொருள்
புடலங்காய் | 100 கிராம் |
கேரட் | 50 கிராம் |
பூண்டு(பற்கள்) | 1 |
சீரகம் | 10 கிராம் |
மிளகு | 10 கிராம் |
மஞ்சள் தூள் | 5 கிராம் |
முருங்கை கீரை இலை | சிறிதளவு |
கறிவேப்பிலை | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு புடலங்காயை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.இதை போல கேரட்யையும் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
- நறுக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் பூண்டு, முருங்கை கீரை இலை மற்றும் அரைத்த கறிவேப்பிலை இலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் வேக வைத்த பொருட்களுடன் சீரகம்,மிளகு தூள் மற்றும் கால் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான சூப்பை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.