சக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சோளம்20 கிராம்
கம்பு20 கிராம்
பாசி பயிறு20 கிராம்
பொட்டு கடலை20 கிராம்
உளுந்து20 கிராம்
பார்லி அரிசி20 கிராம்
சம்பா கோதுமை20 கிராம்
தண்ணீர்500 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மேல உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இந்த நீருடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை சேர்த்துக்கொண்டு கஞ்சி தன்மை அடையும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கி பாகு தன்மையை அடைய செய்ய வேண்டும்.இப்போது சக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயார் ஆகிவிடும்.