நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறு

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
இஞ்சி சிறிதளவு
நாட்டு சர்க்கரை சிறிதளவு
எலுமிச்சை பழம் அரைத்துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் இடித்த இஞ்சி சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • வடிகட்டிய பொருட்களுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.

பயன்கள் :

1) உடல் உறுப்பை சுறுசுறுப்பு அடைய செய்யும்.

2) மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும்.

3) உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

இஞ்சி
தண்ணீர்
நாட்டு சர்க்கரை