கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சோற்று கற்றாழை 200 கிராம்
நாட்டு சர்க்கரை 100 கிராம்
பூண்டு 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • மேலும் பூண்டையும் சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு ஒரு மண் பானையில் நறுக்கிய சோற்று கற்றாழையை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  • மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு லேகிய தன்மை அடையும் வரை வேக வைக்கவும்.
  • பிறகு வேக வைத்த பொருட்களை 5 நிமிடம் தயிர் கடையது போல நன்கு கடைய  வேண்டும். 
  • இப்போது கற்றாழை லேகியம் தயார் ஆகி விடும்.
  • இந்த லேகியத்தை கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் தோன்றும் பலவித நோய்கள் நீங்கும். 
பூண்டு
நாட்டு சர்க்கரை
சோற்று கற்றாழை