மன அழுத்தத்தை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

மஞ்சள் தூள்இரு சிட்டிகை அளவு
வில்வ இலை5 எண்ணம்
வெற்றிலைஒரு முழுமையான இலை
மிளகு7 எண்ணம்
சத குப்பை5 கிராம்
திப்பிலி5 எண்ணம்
பனை வெல்லம்5 கிராம் 
நீர்த்த சுண்ணாம்புதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு வில்வ இலை,மிளகு,சத குப்பை மற்றும் திப்பிலி ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடிக்க வேண்டும்.பிறகு இதனுடன் 5 கிராம் பனை வெல்லம் சேர்த்து நன்றாக இடிக்க வேண்டும்.
  • பிறகு ஒரு முழுமையான வெற்றிலை எடுத்துக்கொண்டு அதன் மேல் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பு மற்றும் ஏற்கனவே பொடியாக்கப்பட்ட வில்வ இலை,மிளகு,சத குப்பை, திப்பிலி ஆகிய நான்கு பொருட்களையும் சேர்ந்து இதனுடன் இரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொண்டு வெற்றிலை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை வாரம் ஒரு முறை இரவு நேரங்களில் பயன்ப்படுத்தி வந்தால் மன அழுத்தத்தம் நீங்கி மூளை நன்கு வளர்ச்சி பெறும்.