நரம்பு தளர்ச்சி சரியாக

தேவையான பொருள்

அமுக்கிரா கிழங்கு 500 கிராம்
மிளகு 25 கிராம்
சுக்கு 25 கிராம்
அதிமதுரம் 25 கிராம்
ஏல அரிசி25 கிராம்
சாதிக்காய்25 கிராம்
தேன் 1 கிலோ
பால்1/2 லிட்டர்

செய்முறை

  • அமுக்கிரா கிழங்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்
  • நல்ல ஒரு வெள்ளை துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிரா கிழங்கு பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்து கொள்ளவும்.
  • இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து கொள்ளவும் .
  • மற்ற மருந்துகளை தனித்தனியாக மீண்டும் இடித்து சலித்து கொள்ளவும்.

  • எல்லா பொடிகளையும் நன்கு கலக்கி கொள்ளவும்.
  • ஒரு கிலோ தேனை ஒரு சிட்டியில் ஊற்றி மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிது சிறிதாக்கி கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்.