தேவையான பொருள்
| வல்லாரைக்கீரை | ஒரு கப் |
| கறிவேப்பிலை | கால் கப் |
| கொள்ளு | கால் கப் |
| உளுந்தம் பருப்பு | 3 டேபிள்ஸ்பூன் |
| காய்ந்த மிளகாய் | 7 |
| பெருங்காயத்தூள் | சிறிதளவு |
| சீரகம் | கால் டீஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை
- வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
- கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
- அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
- சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

