சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி இனி கவலை வேண்டாம்

தேவையான பொருள்

உலர்ந்த சுண்டைக்காய் 100 கிராம்
வேப்பம் பூ 100 கிராம்
சீரகம் 10 கிராம்
ஓமம் 10 கிராம்
மிளகு 10 கிராம்
இந்துப்பு தேவையான அளவு
நல்ல எண்ணெய் 10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு உலர்ந்த சுண்டைக்காய்,வேப்பம் பூ,சீரகம்,ஓமம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
  • வறுத்து எடுத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
  • பிறகு பச்சரிசி வேக வைத்து வடிகட்டி ஒரு கைப்புடி எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் ஏற்கனவே அரைத்த பொருள்களை ஒரு தேக்கரண்டி  சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் 10 மி.லி நல்ல எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அரைத்த பொருட்களுடன் சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி கவலை பட வேண்டாம்.