மருத்துவ குணமிக்க தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சுக்கு 50 கிராம்
மிளகு 5 கிராம்
திப்பிலி 5 கிராம்
பெருங்காயம் 5 கிராம்
வசம்பு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
சீரகம் 5 கிராம்
தனியா 5 கிராம்
வாய் விடங்கம் 5 கிராம்
கருஞ்சிரகம் 5 கிராம்
ஏலக்காய் 5 கிராம்
நெய் 75 மி.லி
தேன் 50 மி.லி
பசும் பால் 200 மி.லி
பனை வெல்லம் 100 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நெய்,தேன்,பசும் பால் மற்றும் பனை வெல்லம் ஆகிய  நான்கு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 200 மி.லி பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் பாலுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து பாகு தன்மை அடையும் வரை பால் மற்றும் பனை வெல்லதை நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் இடித்த பொடியே சிறுக சிறுக சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு தேன் மற்றும் நெய் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி வந்தால் லேகியம் தயார் ஆகி விடும்.  
சுக்கு
மிளகு
திப்பிலி
பெருங்காயம்
வசம்பு
சித்தரத்தை
சீரகம்
தனியா
வாய் விடங்கம்
கருஞ்சிரகம்
ஏலக்காய்
நெய்
பனை வெல்லம்
தேன்