தேவையான பொருள்
| அதிமதுரம் பொடி | 20 கிராம் |
| சுக்கு | சிறிதளவு |
| மிளகு | 10 கிராம் |
| தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு சுக்கு மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் பொடியாக்கப்பட்ட சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- மேலும் இதனுடன் அதிமதுரம் பொடியையும் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும்.

