இரத்த சோகையை குணப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஆப்பிள் 100 கிராம்
கேரட் 100 கிராம்
பீட்ரூட் 25 கிராம்
உலர் திராட்சை 10 எண்ணிக்கை
பசும் நெய் 5 கிராம்
பசும் பால் 100 மி.லி
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 5 கிராம் பசும் நெய் எடுத்து லேசாக சூடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு வசக்க வேண்டும்.
  • பிறகு ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய  பொருட்களையும் தனி தனியே அரைத்து சாறு போல் ஆக்கி ஒரே பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவவும். மேலும் இதனுடன் நன்கு காய்ச்சிய பாலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் காலை அல்லது மாலை நேரங்களில் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலுமாக நீங்கும்.
உலர் திராட்சை
நெய்
பனை வெல்லம்
பீட்ரூட் பொடி
கேரட் பொடி
ஆப்பிள் பொடி