தேவையான பொருள்
| நிலக்கடலை | 150 கிராம் |
| கருப்பு எள்ளு | 50 கிராம் |
| கருப்பு உளுந்து | 200 கிராம் |
| பொட்டு கடலை | 100 கிராம் |
| பாகு வெல்லம் | 100 கிராம் |
| நெய் | 150 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கருப்பு உளுந்து,பொட்டு கடலை,நிலக்கடலை மற்றும் கருப்பு எள்ளு ஆகிய நான்கு வகையான பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இதனுடன் பாகு வெல்லம் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும்.பிறகு நெய்யை மிதமான சூட்டில் காய்ச்சி இதனுடன் சேர்த்து சிறிய உருண்டை புடித்து சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இந்த உருண்டையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சம்பந்தமான எந்த வலியும் நம்மை அண்டாது.

