உடல் வலி முற்றிலுமாக நீங்க ஒரு நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

மிளகு 5 கிராம்
சுக்கு 5 கிராம்
துளசி இலை ஒரு கைப்புடி அளவு
பெருங்காயம் பொடி கால் சிட்டிகை
உப்பு கால் சிட்டிகை
மஞ்சள் பொடி கால் சிட்டிகை
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு துளசி இலையே கழுவி சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும்.மேலும் இந்த துளசி இலையுடன் சுக்கு மற்றும் மிளகு சேர்த்து நன்கு இடித்து கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்து மேலும் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் பெருங்காயம் பொடி,மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடல் வலி அறவே நீங்கும்.