தேவையான பொருள்
| மஞ்சள் பொடி | 25 கிராம் |
| கிச்சிலி கிழங்கு | 10 கிராம் |
| கசகசா | 10 கிராம் |
| கோரை கிழங்கு | 10 கிராம் |
| சந்தன தூள் | 10 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு எல்லா பொருட்களையும் தனித்தனியே ஒரு கல்வத்தில் இட்டு பொடியாக்கி கொள்ளவும்.
- பொடியாக்கப்பட்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொள்ளவும்.
- தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிது நீரில் கலந்து உடல் முழுவதும் பூசி கொள்ளவும்.
- பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்கும்.
- மேலும் உடலில் கற்பூர மணம் தோன்றும்.
- மற்றோரு வழி என்னவென்றால் துளசி செடியை நீரில் ஊற வைத்து அந்த நீரை குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.
