உடல் துர்நாற்றம் போக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

மஞ்சள் பொடி 25 கிராம்
கிச்சிலி கிழங்கு 10 கிராம்
கசகசா 10 கிராம்
கோரை கிழங்கு 10 கிராம்
சந்தன தூள் 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு எல்லா பொருட்களையும் தனித்தனியே ஒரு கல்வத்தில் இட்டு பொடியாக்கி கொள்ளவும்.
  • பொடியாக்கப்பட்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொள்ளவும்.
  • தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிது நீரில் கலந்து உடல் முழுவதும் பூசி கொள்ளவும்.
  • பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்கும்.
  • மேலும் உடலில் கற்பூர மணம் தோன்றும்.
  • மற்றோரு வழி என்னவென்றால் துளசி செடியை நீரில் ஊற வைத்து அந்த நீரை குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.