தேவையான பொருள்
| கிராம்பு | 7 எண்ணம் |
| தேன் | 10 மி.லி |
| வெற்றிலை | ஒரு முழுமையான இலை |
| சின்ன வெங்காயம் | 3 எண்ணம் |
| நீர்த்த சுண்ணாம்பு | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு சின்ன வெங்காயத்தை நன்றாக பொடியாக நறுக்கி ஒரு கல்வத்தில் இட்டு இதனுடன் கிராம்பு மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக வள வளப்பு தன்மையுடன் இடித்து எடுத்துக் கொள்ளவும்.
- இவ்வாறு இடித்து எடுத்தப்பொருட்களை ஒரு வெண்மையான துணியில் வைத்து சாற்றை பிழிந்து எடுக்க வேண்டும்.இந்த சாறு உடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- பிறகு நீர்த்த சுண்ணாம்பை எடுத்து நெஞ்சு வலி உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் உலர வைத்து அதன் பிறகு அந்த சாறை நீர்த்த சுண்ணாம்பு தடவின இடத்தில் இட்டு தடவி வந்தால் நெஞ்சு வலி சம்பந்தமான எந்த வலியும் நம்மை அண்டாது.

