முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த கொதிக்கும் நீருடன் இடித்த மிளகு,வெற்றிலை,தூதுவளை இலை,கற்பூரவள்ளி இலை,துளசி இலை மற்றும் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களையும் நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான இந்த மருத்துவ குணமிக்க நீரை சிறியவர்கள் 30 மி.லி பெரியவர்கள் 60 மி.லி என்கிற விகிதத்தில் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் உடலில் இருந்து அறவே நீங்கும்.