1 முதல் 5 வரை வயது உள்ள குழந்தைகளுக்கு சளி,இருமல் நீங்க ஓர் அற்புதமான கசாயம்

தேவையான பொருள்

வெற்றிலைஒரு முழுமையான இலை
தூதுவளை இலை2 அல்லது 3 இலைகள்
கற்பூரவள்ளி இலை2 அல்லது 3 இலைகள்
துளசி இலைசிறிதளவு
மிளகு5 எண்ணிக்கை
மஞ்சள் தூள்கால் சிட்டிகை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இந்த கொதிக்கும் நீருடன் இடித்த மிளகு,வெற்றிலை,தூதுவளை இலை,கற்பூரவள்ளி இலை,துளசி இலை மற்றும் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களையும் நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான இந்த மருத்துவ குணமிக்க நீரை சிறியவர்கள் 30 மி.லி பெரியவர்கள் 60 மி.லி என்கிற விகிதத்தில் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் உடலில் இருந்து அறவே நீங்கும்.