தேவையான பொருள்
முருங்கை கீரை இலை | ஒரு கைப்புடி அளவு |
தண்ணீர் | 150 மி.லி |
சின்ன வெங்காயம் | 50 கிராம் |
பூண்டு | 50 கிராம் |
மிளகு பொடி | 20 கிராம் |
சுக்கு பொடி | கல் சிட்டிகை |
உப்பு | தேவையான அளவு |
சீரகம் | 5 கிராம் |
நல்ல எண்ணெய் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு முருங்கை கீரையை சூரிய ஒளியில் காய வைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
- மேலும் இதனுடன் சீரகம் மற்றும் நன்கு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொண்டு லேசாக வதக்க வேண்டும்.மேலும் இதனுடன் நறுக்கிய பூண்டையும் சேர்த்துக்கொண்டு வதக்க வேண்டும்.
- தேவையான அளவு உப்பு,கால் சிட்டிகை சுக்கு பொடி மற்றும் 5 கிராம் மிளகு பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 150 மி.லி நிரையும் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக இரண்டு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- இப்போது மருத்துவ குணமிக்க முருங்கை கீரை சூப் தயார் ஆகி விடும்.இதனை வாரம் இருமுறை குடித்து வந்தால் தொப்பை முற்றிலுமாக நீங்கும்.