உச்சி முதல் பாதம் வரை உள்ள மூட்டு வலி நீங்க உதவும் குறிப்புகள்

தேவையான பொருள்

பிரண்டை 100 கிராம்
மிளகு 10 கிராம்
சீரகம் 5 கிராம்
வெந்தையம் கால் சிட்டிகை
வத்தல் 1
புளி 5 கிராம்
உப்பு தேவையான அளவு
நல்ல எண்ணெய் 50 மி.லி
பெருங்காயம் 5 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பிரண்டையை நன்கு தோல் சீவி சிறிய துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 25 மி.லி நல்ல எண்ணெய்யை இட்டு இதனுடன் மிளகு,சீரகம்,வெந்தையம்,வத்தல்,புளி,உப்பு மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களையும் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
  • இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதை போல பிரண்டையும் நல்ல எண்ணெய் உடன் சேர்த்து வசக்க வேண்டும்.
  • இவ்வாறு வசக்கி எடுத்த பொருட்களையும் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பொருட்களை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
மிளகு
சீரகம்
வத்தல்
உப்பு
பெருங்காயம்
நல்லெண்ணெய்
வெந்தயம்