உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்

உலர் ரோஜா50 கிராம்
சுக்கு50 கிராம்
உலர் செம்பருத்தி பூ50 கிராம்
ஏலக்காய்50 கிராம்
நன்னாரி வேர்50 கிராம்
சீரகம்50 கிராம்
உலர் தாமரை பூ50 கிராம்
சோம்பு50 கிராம்
தண்ணீர்200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீரில் இரண்டு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது அருமையான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.
உலர் தாமரை பூ
தண்ணீர்
செம்பருத்தி பூ
சோம்பு
உலர் ரோஜா
சீரகம்
நன்னாரி வேர்
ஏலக்காய்
சுக்கு