தேவையான பொருள்
| தண்ணீர் | 500 மி.லி |
| கற்பூரவள்ளி இலை | 4 எண்ணிக்கை |
| துளசி இலை | 10 எண்ணிக்கை |
| சுக்கு பொடி | சிறிதளவு |
| மிளகு பொடி | சிறிதளவு |
| பனை வெல்லம் | 50 கிராம் |
| கிராம்பு | 1 |
| தேயிலை | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீரில் கற்பூரவள்ளி இலை,துளசி இலை சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.
- மேலும் சுக்கு பொடி,மிளகு பொடி.பனை வெல்லம்,கிராம்பு மற்றும் தேயிலை ஆகிய ஐந்து பொருட்களையும் சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பிறகு தேநீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் சளி மற்றும் காய்ச்சல் நீங்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

