தேவையான பொருள்
சுக்கு பொடி | 20 கிராம் |
மிளகு | 10 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
பூண்டு (பற்கள் ) | 8 எண்ணிக்கை |
சின்ன வெங்காயம் | 8 எண்ணிக்கை |
நல்லெண்ணெய் | 50 மி.லி |
கடுகு | 5 கிராம் |
பெருங்காயம் | 5 கிராம் |
வத்தல் | 1 |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
மஞ்சள் தூள் | 5 கிராம் |
புளிக்கரைசல் | 50 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 5 மி.லி நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நான்கு சுடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி,மிளகு,சீரகம்,பூண்டு (பற்கள் ), மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களை எண்ணெய் உடன் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
- இவ்வாறு வசக்கிய பொருட்களை எல்லாம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு புதிதாக வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் கடுகு,வத்தல் மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக தாலிக்க வேண்டும்.
- பிறகு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் உப்பு,மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.
- பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி கொதிக்க வைக்க வேண்டும் சுக்கு குழம்பு தயார் ஆகி விடும்.