சுக்கு குழம்பு தயாரிக்க மிகவும் எளிய வழிமுறைகள்

தேவையான பொருள்

சுக்கு பொடி 20 கிராம்
மிளகு 10 கிராம்
சீரகம் 5 கிராம்
பூண்டு (பற்கள் ) 8 எண்ணிக்கை
சின்ன வெங்காயம் 8 எண்ணிக்கை
நல்லெண்ணெய் 50 மி.லி
கடுகு 5 கிராம்
பெருங்காயம் 5 கிராம்
வத்தல் 1
கறிவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 5 கிராம்
புளிக்கரைசல் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  இதன் பிறகு 5 மி.லி நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நான்கு சுடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி,மிளகு,சீரகம்,பூண்டு (பற்கள் ), மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களை எண்ணெய் உடன் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
  • இவ்வாறு வசக்கிய பொருட்களை எல்லாம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு புதிதாக வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் கடுகு,வத்தல் மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக தாலிக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் உப்பு,மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.
  • பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி கொதிக்க வைக்க வேண்டும் சுக்கு குழம்பு தயார் ஆகி விடும்.