சுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்

தேவையான பொருள்

கேழ்வரகு மாவு100 கிராம்
வேர்கடலை50 கிராம்
கடலை எண்ணெய்50 மி.லி
பனை வெல்லம்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு கேழ்வரகு மாவுடன் சிறிதளவு உப்பு நீர் கலந்து சிறிய உருண்டையாக புடித்துக்கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அந்த உருண்டைகளை அடையாக தட்ட வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் இந்த அடையை வேக வைக்க வேண்டும்.பிறகு வேர்கடலையை முறு முறு தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • இதை போன்று வேக வைத்த கேழ்வரகு அடையையும் முறு முறு தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு பனை வெல்லம்,அரைத்த வேர்கடலை மற்றும் அரைத்த கேழ்வரகு அடையையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக பிசைந்து பிறகு உருண்டை புடிக்க வேண்டும்.இப்போது கேழ்வரகு உருண்டைகள் தயார் ஆகி விடும்.    
கேழ்வரகு மாவு
வேர்கடலை
கடலை எண்ணெய்
பனை வெல்லம்