ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்

தேவையான பொருள்

கசகசா 25 கிராம்
பாதாம் பருப்பு 25 கிராம்
கற்கண்டு 25 கிராம்
மிளகு 20 கிராம்
நெய் தேவையான அளவு
தேன் 30 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கற்கண்டு,பாதாம் பருப்பு,கசகசா மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு தூள் போல மாற்ற வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு நெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு லேகியம் தன்மை அடையும் வரை கலக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் தூய்மையான தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான லேகியத்தை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு மூன்று நாட்கள் உலர வைக்கவும்.
  • அதன் பிறகு இந்த லேகியத்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோய் நீங்கும்.