தேவையான பொருள்
| தும்பை செடி இலை | 6 இலைகள் |
| குப்பைமேனி இலை | 6 இலைகள் |
| கருஞ்சீரகம் | 5 கிராம் |
| தேன் | தேவையான அளவு |
| தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் தும்பை செடி இலை,குப்பைமேனி இலை மற்றும் கருஞ்சிரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- அதன் பிறகு இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் சிறியவர்கள் 30 மி.லி மற்றும் பெரியவர்கள் 60 மி.லி என்கிற வீதத்தில் குடித்து வந்தால் மூச்சுத்திணறல் அறவே நீங்கும்.

