2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள்

பேரிச்சம்பழம்4 எண்ணிக்கை
வாழைப்பழம்1
பால்100 மி.லி
தேன்சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பேரிச்சம்பழத்தை 30 நிமிடம் நீரில் நன்கு ஊற வைக்கவும்.
  • பிறகு வாழைப்பழத்தை சிறிய துண்டாக நறுக்கவும்.
  • மேலும் ஊற வைத்த பேரிச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை எல்லாம் 100 மி.லி பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்கும்.