குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

தண்ணீர்100 மி.லி
கேழ்வரகு15 கிராம்
பனங்கற்கண்டுதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கேழ்வரகை  சுத்தம் செய்து 3 மணி நேரம் நீரில் நன்கு ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த கேழ்வரகை போதுமான அளவு  தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த கேழ்வரகை நன்கு வடிகட்டி சாற்றை மட்டும் தனியே வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் கேழ்வரகு சாறு மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 
  • இதனை வடிகட்டி ஆர வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வைட்டமின் குறைபாடு நீங்கும்.