பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தேங்காய் எண்ணெய் 30 மி.லி
எலுமிச்சை பழம் அரை துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாற்றை மட்டும் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு இரண்டு பொருட்களையும் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து 20 நிமிடம் உலர வைக்கவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பொடுகை முற்றிலுமாக போக்க முடியும்.  
  • இவ்வாறு தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நிரந்தரமாக பொடுகில் இருந்து விடுபடலாம். 
தேங்காய் எண்ணெய்