தேவையான பொருள்
| ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ | 1 கப் |
| வரகு அரிசி | 1 கப் |
| உளுந்து | ¼ கப் |
| கடலைப்பருப்பு (அ) சோளம் | ¼ கப் |
| வெங்காயம் | 3 |
| கடுகு | ¼ ஸ்பூன் |
|
கருவேப்பிலை, கொத்தமல்லி |
சிறிதளவு |
|
பச்சை மிளகாய் |
3 |
| உப்பு, நல்லெண்ணெய் | தேவையான அளவு |
செய்முறை
- வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும்.
- பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அரைத்த மாவில் கொட்டவும்.
- நறுக்கிய வாழைப்பூ, உப்பு சேர்த்து அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
- 5 தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.

