ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லி

தேவையான பொருள்

 

புழுங்கலரிசி2 கப்
ராகி1 கப்
வெந்தயம்10 கிராம்

உளுந்து

1 கப்

 

செய்முறை

  • அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்).

  • உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்
  • உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.

  • கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும். மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.