முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

நல்ல எண்ணெய் 75 மி.லி
தேங்காய் எண்ணெய் 30 மி.லி
பூண்டு
(பற்கள்)
6 எண்ணிக்கை
சின்ன வெங்காயம் 6 எண்ணிக்கை
கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு
வெந்தயம் 5 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு  நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஒன்று சேர உறவாடும் படி எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம்  மற்றும் பூண்டு (பற்கள்) சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் இரண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த எண்ணெய்யை 7 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இதன் பிறகு இந்த எண்ணெய்யை தினந்தோறும் தலையில் தேய்த்து குளித்து வர முடி நன்கு வளரும்.