தேவையான பொருள்
சுரைக்காய் | 3 கப் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) |
பாசிப்பருப்பு | 1/2 கப் |
உப்பு | தேவையான அளவு |
தண்ணீர் | தேவையான அளவு |
துருவிய தேங்காய் | 3/4 கப் |
வரமிளகாய் | 2 |
சீரகம் | 1 டீஸ்பூன் |
மஞ்சள் தூள் | 1 டீஸ்பூன் |
அரிசி மாவு | 2 டீஸ்பூன் |
எண்ணெய் | 1 டீஸ்பூன் |
கடுகு | 1 டீஸ்பூன் |
கறிவேப்பிலை | சிறிது |
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அத்துடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால், சுரைக்காய் கூட்டு ரெடி!!!