வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

விளக்கு எண்ணெய் சிறிதளவு
சோம்பு 10 கிராம்
உப்பு சிறிதளவு
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் சோம்பு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு தண்ணீரை  நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த தண்ணீருடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதை வெறும் வயிற்றில் வாரம் ஒரு முறை குடித்து வந்தால் வயிறு முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
  • இந்த மருந்து மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும் வலிமை பெற்றது.