தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் அதிமதுரம் பொடி 50 கிராம் மிளகு 50 கிராம் சோம்பு 50 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் சோம்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தனித்தனியே மிதமான சுட்டில் நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு அதிமதுரம் பொடி,மிளகு பொடி மற்றும் சோம்பு பொடி ஆகிய பொருட்களை சமஅளவு (ஒரு தேக்கரண்டி) எடுத்துக்கொள்ளவும்.மேலும் எல்லா பொடியையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.பிறகு இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமாகும். அதிமதுரம் பொடி மிளகு தேன் சோம்பு Related posts:உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்மூலநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறு