தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் அதிமதுரம் பொடி 50 கிராம் மிளகு 50 கிராம் சோம்பு 50 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் சோம்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தனித்தனியே மிதமான சுட்டில் நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு அதிமதுரம் பொடி,மிளகு பொடி மற்றும் சோம்பு பொடி ஆகிய பொருட்களை சமஅளவு (ஒரு தேக்கரண்டி) எடுத்துக்கொள்ளவும்.மேலும் எல்லா பொடியையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.பிறகு இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமாகும். அதிமதுரம் பொடி மிளகு தேன் சோம்பு Related posts:அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்சக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயாரிக்கும் முறை