கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய ஒரு எளிய இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

கேழ்வரகு 50 கிராம்
மாவு ஜவ்வரிசி 25 கிராம்
பால் 150 மி.லி
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கேழ்வரகு மற்றும் மாவு ஜவ்வரிசி ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் இரண்டு நிமிடம் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் மூன்று தேக்கரண்டி அரைத்த பொடியை சிறிதளவு நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இதை பாலுடன் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து குடித்து வந்தால் கால்சியம் குறைப்பாடு முற்றிலுமாக நீங்கும்.
மாவு ஜவ்வரிசி
பனை வெல்லம்
கேழ்வரகு