முகச்சுருக்கம் நீங்க ஒரு எளிய இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பாதாம் 100 கிராம்
ஏலக்காய் 5 எண்ணிக்கை
மிளகு பொடி சிறிதளவு
பால் 200 மி.லி
தேன் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதாம் மற்றும் ஏலக்காய் ஆகிய இரண்டு பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் ஒரு தேக்கரண்டி  அரைத்த பொடியை பாலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பாலுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை இரவு நேரங்களில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் முகச்சுருக்கம் முற்றிலுமாக நீங்கும்.
தேன்
பாதாம்
மிளகு பொடி
ஏலக்காய்
மஞ்சள் தூள்