தேவையான பொருள்
உலர்ந்த சுண்டைக்காய் | 100 கிராம் |
வேப்பம் பூ | 100 கிராம் |
சீரகம் | 10 கிராம் |
ஓமம் | 10 கிராம் |
மிளகு | 10 கிராம் |
இந்துப்பு | தேவையான அளவு |
நல்ல எண்ணெய் | 10 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு உலர்ந்த சுண்டைக்காய்,வேப்பம் பூ,சீரகம்,ஓமம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
- வறுத்து எடுத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
- பிறகு பச்சரிசி வேக வைத்து வடிகட்டி ஒரு கைப்புடி எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் ஏற்கனவே அரைத்த பொருள்களை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இதனுடன் 10 மி.லி நல்ல எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அரைத்த பொருட்களுடன் சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.
- இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி கவலை பட வேண்டாம்.