உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் January 20, 2021 | No Comments தேவையான பொருள் வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு புளி சிறிதளவு காய்ந்த மிளகாய் 2 எண்ணிக்கை பெருங்காயத்தூள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கடுகு ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம்பூவை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து தாளிக்கவும்.மேலும் இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.இப்போது சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயார் ஆகி விடும். வேப்பம் பூ புளி காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் உப்பு கடுகு தேங்காய் எண்ணெய் Related posts:மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்வயிற்றில் புண்கள் சரியாகமஞ்சள் தேநீர்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை