தேவையான பொருள்
கரிசலாங்கண்ணி கீரை இலை | ஒரு கைப்புடி அளவு |
முடக்கத்தான் கீரை இலை | ஒரு கைப்புடி அளவு |
முசுமுசுக்கை கீரை இலை | ஒரு கைப்புடி அளவு |
பொன்னாங்கன்னி கீரை | ஒரு கைப்புடி அளவு |
கீழா நெல்லி இலை | ஒரு கைப்புடி அளவு |
தேங்காய் எண்ணெய் | 1 லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 200 மி.லி தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
- மேலும் இதனுடன் கரிசிலாங்கன்னி கீரை இலை,முடக்கத்தான் கீரை இலை,முசுமுசுக்கை கீரை இலை,பொன்னாங்கன்னி கீரை இலை மற்றும் கீழா நெல்லி இலை ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 1 லி தேங்காய் எண்ணெய்யை 500 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு கிடைத்த எண்ணெய்யை தினந்தோறும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடிகள் நன்கு வளரும்.