முடி நன்றாக வளர இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு

தேவையான பொருள்

கரிசலாங்கண்ணி கீரை இலைஒரு கைப்புடி அளவு
முடக்கத்தான் கீரை இலைஒரு கைப்புடி அளவு
முசுமுசுக்கை கீரை இலைஒரு கைப்புடி அளவு
பொன்னாங்கன்னி கீரைஒரு கைப்புடி அளவு
கீழா நெல்லி இலைஒரு கைப்புடி அளவு
தேங்காய் எண்ணெய்1 லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 200 மி.லி தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் கரிசிலாங்கன்னி கீரை இலை,முடக்கத்தான் கீரை இலை,முசுமுசுக்கை கீரை இலை,பொன்னாங்கன்னி கீரை இலை மற்றும் கீழா நெல்லி இலை ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • 1 லி தேங்காய் எண்ணெய்யை 500 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த எண்ணெய்யை தினந்தோறும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடிகள் நன்கு வளரும்.