முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்கு பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் 10 கிராம் பனை வெல்லம் எடுத்து மிதமாக பாகுத்தன்மையை அடையும் வரை சூடுபடுத்தவும்.
மேலும் இதனுடன் 100 மி.லி தண்ணீரை சேர்க்கவும்.
பிறகு இதனுடன் ஏற்கனவே இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும்.
இப்போது காய்ச்சலை போக்கும் மிளகு கசாயம் தயார் ஆகி விடும்.