தேவையான பொருள்
| மிளகு | 10 கிராம் |
| சீரகம் | 10 கிராம் |
| பனை வெல்லம் | 10 கிராம் |
| தண்ணீர் | 100 மி.லி |
| தேன் | 10 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்கு பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் 10 கிராம் பனை வெல்லம் எடுத்து மிதமாக பாகுத்தன்மையை அடையும் வரை சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் 100 மி.லி தண்ணீரை சேர்க்கவும்.
- பிறகு இதனுடன் ஏற்கனவே இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும்.
- இப்போது காய்ச்சலை போக்கும் மிளகு கசாயம் தயார் ஆகி விடும்.

