வாய் புண் வேகமாக குணமாக சிறந்த வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சீரகம் 200 கிராம்
ஓமம் 100 கிராம்
ஏலக்காய் 100 கிராம்
மிளகு 100 கிராம்
பனங்கற்கண்டு 500 கிராம்
தண்ணீர் 500 மி.லி
நெய் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சீரகம்,ஓமம்,ஏலக்காய்,மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 500 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நன்கு பாகு தன்மை அடையும் வரை கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன் 50 மி.லி நெய் சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான லேகியம் தயார்.
  • இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் புண் நீங்கும்.   
நெய்
தண்ணீர்
சீரகம்
மிளகு
ஏலக்காய்
ஓமம்
பனங்கற்கண்டு