தேவையான பொருள்
வெங்காயம் | தேவையான அளவு |
தேங்காய் எண்ணெய் | ஒரு தேக்கரண்டி |
விளக்கு எண்ணெய் | ஒரு தேக்கரண்டி |
ஆலிவ் எண்ணெய் | ஒரு தேக்கரண்டி |
விட்டமின் இ மாத்திரை | 1 |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகுவெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த வெங்காயத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
- இந்த கலவையை இரவு தூக்கத்திற்கு முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
- இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.