தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம்

தேவையான பொருள்

வெங்காயம் தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
விளக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
விட்டமின் இ மாத்திரை 1

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகுவெங்காயத்தை  பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த வெங்காயத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
  • இந்த கலவையை இரவு தூக்கத்திற்கு முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
  • இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.