உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

வாழைப்பழம் 1
பால் 200 மி.லி
கற்கண்டு தேவையான அளவு
வெண்ணெய் 5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக நறுக்கிய  வாழைப்பழ துண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் தேவையான அளவு கற்கண்டு மற்றும் 5 மி.லி வெண்ணையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த மருத்துவம் மிக்க பாலை  தினந்தோறும் காலை நேரங்களில் பருகி வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக அதிகரித்து உடலின் சதைப்பற்றையும் அதிகரிக்க செய்யும்.