செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 300 மி.லி
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் 5 கிராம்
பெருஞ்சிரகம் 5 கிராம்
கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களுடன் 300 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீரை 150 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை அஜீரணம் உள்ள நேரங்களில் குடித்து வந்தால் செரிமானம் சக்தி அதிகரித்து உடலின் சோர்வை முற்றிலுமாக அகற்றும்.
சீரகம்
தண்ணீர்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருஞ்சிரகம்